Friday, 1 February 2013

நகர வீதிகளெங்கும்

அலைந்து தெறித்தது பார்வை.

நூற்றுக்கணக்கான

முகங்களும் பொருட்களும்

சுமையேற்றிய கண்களில்

பதிந்ததென்னவோ

கொய்யாப்பழ முகமொன்றுதான்



ஒவ்வொரு முறை

கொய்யாப்பழ முகத்தைப் 

பார்க்கும் போதும்

மனதில் எழுகிறது

நினைவில் பதிந்த

முகமொன்றின் நிழல்



பண்டிகை நாளின்

பகற்  பொழுதில்

பரணிலிருக்கும் பழையவைகள்

கிளறப்படும் போது

அப்பாவின் நெஞ்சில்

அடைக்கலமான

அம்மாவின்

இளமைக்கால கொய்யாப்பழ

முகப்பதிவு.



3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே,

      //அப்பாவின் நெஞ்சில்

      அடைக்கலமான

      அம்மாவின்

      இளமைக்கால கொய்யாப்பழ

      முகப்பதிவு//

      அழகிய

      கொய்யாபழ முகம்

      உவமையானது

      தங்களின்

      அழகிய பதிவில்...

      Delete
    2. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே,

      //அப்பாவின் நெஞ்சில்

      அடைக்கலமான

      அம்மாவின்

      இளமைக்கால கொய்யாப்பழ

      முகப்பதிவு//

      அழகிய

      கொய்யாபழ முகம்

      உவமையானது

      தங்களின்

      அழகிய பதிவில்...

      Delete